புல்லாங்குழல் கவிஞர் இரா .இரவி
தீக்காயம் பட்ட போதும்
வருந்தவில்லை
புல்லாங்குழல்
காற்றை இசையாக்கும்
வித்தகக் கருவி
புல்லாங்குழல்
மவ்னமாகவே இருக்கும்
காற்றுத் தீண்டும் வரை
புல்லாங்குழல்
உருவில் சிறியது
உணர்வில் பெரியது
புல்லாங்குழல்
காட்டில் விளைந்து
காதோடு உறவாடும்
புல்லாங்குழல்
தீயால் துளைத்தபோதும்
இசை நல்கும்
புல்லாங்குழல்
இதழ் குவித்து விரல் பதித்து
காற்றுத் தந்ததும் இசைக்கும்
புல்லாங்குழல்
அன்று முதல் இன்று வரை
அற்புத இசை
புல்லாங்குழல்
எம்மொழியும் சம்மதம்
இனிய இசைப் பிறக்கும்
புல்லாங்குழல்
கானம் இசைத்து
கவலைப் போக்கும்
புல்லாங்குழல்
பல இசையிலும்
தனித்துக் கேட்கும்
புல்லாங்குழல்
விழிகள் மூடி செவிகள் திறந்தால்
தேன் பாயும்
புல்லாங்குழல்
மற்ற கவிதைகள்
பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் ! கவிஞர் இரா .இரவி
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது கவிஞர் இரா.இரவி
மரத்தின் கேள்விகள் ! கவிஞர் இரா .இரவி !
சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி
சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி
தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !
சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !
ஓராயிரம் பொருள் கிடைக்கும் – ஹைக்கூ. கவிஞர் இரா.இரவி.
அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி
நன்றி கவிஞர் இரா.இரவி