தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !
கற்பிக்கப்பட்ட கற்பனை
கட்டுக்கதை உண்மையன்று !
முடிவெட்ட தலை தராதவன்
முழுவதும் எழுதிட தந்திருப்பானா ?
வாழ்நாள் முழுவதையும் எழுதிட
தலை என்ன காகித ஆலையா ?
காலங்காலமாக பலரும்
கதைத்து வந்த பொய் !
அப்படி ஒன்றும் இல்லை
அறிந்திடுக தெரிந்திடுக தெளிந்திடுக !
தலையெழுத்தின் மொழி என்ன
தெரியுமா உங்களுக்கு வாசிக்க !
விதி என்று ஒன்றுமில்லை
மதியால் சிந்தித்து சிறந்திடலாம் !
மனிதர்களுக்கு மட்டும்தானா விதி ?
மற்ற விலங்குகளுக்கும் உண்டா ?
தலையில் படப்பிடிப்புக் கருவியில்
தலை எழுத்து அகப்படவில்லை !
இறைவன் எழுதியது என்றால்
இறைவனுக்கு இதுதான் வேலையா ?
இல்லாத ஒன்றான தலையெழுத்தை
இருப்பதாக எண்ணி வருந்தாதீர் !
நன்றி கவிஞர் இரா.இரவி